காதலின் மீதியோ நீ-20
காதலின் மீதியோ நீ-20
ஆயுஷ் தன்னருகில் படுத்திருந்த நித்ராவை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடிந்து அன்றுதான் எந்த வித கோபமும் வெறுப்பும் இல்லாமல் அவளையே பார்த்தவாறு இருந்தான்.
பீரீத்தா டாடிகிட்ட அந்த கேள்வியை கேட்கும் போது ஏன் ஜெர்க்கனாரு? அப்போ அதுல ஏதோ இருக்குதுல்ல.
ஒருவேளை நானும் நித்ராவும் காதலிச்சதும் பழகுனதும் எல்லாமே அவருக்கு தெரிஞ்சிருக்குமோ? அவர் எங்க காதலை பிரிக்க ஏதாவது விளையாடியிருப்பாரோ? இப்படியிருக்க வாய்ப்பு உண்டா? இல்லையா?என்று பலவித குழப்பத்தில் இருந்தான்.
அந்த நேரம்தான் அவள் கல்யாண மேடையில் வைத்து பேசியது எல்லாம் அவனுக்கு திரும்பவும் ஞாபகத்துக்கு வந்தது.
நான் உங்களைத் தவிர வேற யாரையும் கனவுலக்கூட நினைக்க மாட்டேன். உங்க தாலி என் கழுத்துல நான் சாகுற வரைக்கும் இப்படியேதான் இருக்கும். நான் வேற யாரு கூடவும் வாழமாட்டேன் .ஆனால் உங்க கூட நான் வரமுடியாது .உங்க சந்தோஷமும் உங்க வாழ்க்கை எனக்கு முக்கியம் என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினாளே! என்னை அங்கிருந்து போக சொன்னாளே! உங்கள் வாழ்க்கையை பாருங்க உங்க குடும்பத்தார் ஏற்பாடு பண்ணுன பொண்ணையே கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாக வாழுங்க. உங்க சந்தோசம்தான் எனக்கு முக்கியம்னு சொன்னாளே!
அப்போ அதுல ஏதோ இருக்குது என்னை பிடிக்காமல் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க போறான்னு நினைச்சனே. அவள் அப்படிப் போக வாய்ப்பில்லையே என்று நினைக்கமா போயிட்டனே. என்னவோ நடந்திருக்கிறது என்று இப்பொழுதுதான் சரியாக அவள் பேசியதின் அர்த்தத்தை புரிந்து கொண்டான்.
இப்போ யோசித்து புரிந்து என்ன பயன் அதற்குள்ளாகவே அவளை வார்த்தைகளாலும் செய்கைகளாலும் வதைத்து குற்றியுராகப் போட்டிருக்கிறாயே!
அவளை மீட்டுக் கொண்டு வர உனக்கு இந்த ஜென்மம் போதுமா?என்று அவனுக்கு மனசாட்சி அவனைக் குத்திக் கேள்விக்கேட்டது.
உடனே அவளருகில் போய் நெருங்கி உட்கார்ந்தவன் அவளது கையைப் பிடித்து தனது உள்ளங்கையில் வைத்துப் பாந்தமாகப் பிடித்துக்கொண்டான்.
அவனது அந்த சின்னத் தொடுகையிலயே வேகமாக எழுந்து உட்கார்ந்தவள் தனது வயிற்றை மறைத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
“எதுக்குக் கையைப்பிடிச்சுட்டு உட்கார்ந்திருக்காங்க” என்று முழித்தவள் அவனது கையில் இருந்துத் தனது கையை உருவியெடுக்கூடப் பயந்துப்போய் அமர்ந்திருந்தாள்.
“ஏன் என்னைவிட்டு இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சன்னு உண்மையை சொல்லு? என் காதல் உண்மையானதான்னு சந்தேகப்பட்டன்னுதானே நான் ரெஜிஸ்டர் மேரேஜிக்க ஏற்பாடு செய்தேன்.அதை அவ்வளவு சந்தோசமாக ஏற்றுக்கொண்டவள் எப்படி என் காதலை உதறித்தள்ளிட்டு போன? அதுக்குப் பின்னாடி இருக்கிற காரணம் என்ன?எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்.உண்மையை சொல்லு நித்து”என்று தன்மையாககக் கேட்டான்.
அவனது கேள்வியிலயே பதறியவள்’எப்படியும் இன்னைக்கு அடிப்பான், சண்டை போடுவான் அடுத்து என்ன பண்ணுவான் என்று தெரியாதே’ என்று பயந்து போய் அவனையே பார்த்திருந்தாள்.
அவளது உதட்டை அவளே கடித்துப்பிடித்து அடக்கிக்கொண்டவளுக்குக் கண்ணீர் மட்டும் நிற்காது வந்துக்கொண்டிருந்தது.
“உனக்கு உண்மையிலயே என்மேல் காதல் இல்லையா? என்னை பழிவாங்கதான் காதலிச்சேன்னு சொன்னியா? இல்லையே நான்தான் நான் உன்கிட்ட காதலை சொன்னேன் .நீ அப்படியே எந்தவிதமான நடிப்பையும் என்கிட்ட வெளிப்படுத்தவில்லையே உண்மையைச் சொல்லு அடிக்கமாட்டேன் சண்டை போடலாம் மாட்டேன்” என்று நிதானமாக பேசினான்.
“என்னைக் கல்யாணம் பண்ணிட்டு நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்கள்ல. இதுக்குத்தான் முதல்லயே சொன்னேன். இந்த மிடில்கிளாஸ் பொண்ணு உங்களுக்கு செட்டாக மாட்டேன்.நீங்க உங்கப்பா பார்த்து வைச்சிருக்கிற ரிச்சாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழுங்க.எனக்கு உங்கக்கூட வாழ்ந்த இந்த நாலுமாச வாழ்க்கையே போதும்.நானே உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் நீங்க நல்லாயிருங்க” என்று உதடுகள் துடிக்க கண்ணீர் வெடித்துவர அதை அடக்கிக் கொண்டுப் பேசினாள்.
“நீ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது எல்லாம் அப்புறம் இருக்கட்டும் இப்ப நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு என்னை நீ உண்மையா காதலிக்கிறாயா?” இதுக்கு முன்னாடி என்னை உண்மையா காதலிச்சியா? இதுக்கு ஆமா இல்லைன்னு ஒரே வார்த்தையில் மட்டும் பதில் சொல்லு போதும்.உன் நாடகமெல்லாம் எனக்குத் தேவையில்லை” என்று எரிச்சலில் கடுப்பாகி கேட்டான்.
அவள் ஆமா என்று தலையாட்டினாள்.உடனே அவளது கையைவிட்டவன் போய் அவளைப் பார்க்காது திரும்பிப் படுத்துத் தூங்கிவிட்டான்.
அடுத்தநாள் ஆயுஷ் எழுந்தவன் முதல் வேலையாக ஒதுங்கிப் படுத்திருந்த நித்ராவின் நெற்றியில் முத்தம் வைத்தது தான்.
அவன் முத்தம் வைத்ததும் பதறிப்போய் எழுந்து நெஞ்சில் கைவைத்துக்கொண்டுப் பார்த்தாள்.
ஒரு முத்தம்கூட அவளுக்கு பயத்தைக் கொடுக்குதா? என்று நினைத்து வருந்தியவன் அவளிடம் பேசாது எழுந்துப்போய்விட்டான்.
எதுக்கு இப்போ இரண்டுநாளா நார்மல்மோடுல இருக்காருன்னு தெரிலையே.இந்த இராட்சஷன் மோடுல பார்த்துட்டு இதுவேற பயமாயிருக்கே யோசித்தாள்.
ஆயுஷ் குளித்துக் கிளம்பியவன் அவளது கையைப்பிடித்து எழுப்பி டைனிங் டேபிளில் தன்னருகில் உட்காரவைத்தவன் அவளுக்கும் தட்டில் எடுத்து வைத்துவிட்டுத் தானும் சாப்பிடத் தொடங்கினான்.
அதைப்பார்த்த நித்ரா தன்முன்பாக இருந்து குப்தாவை பயந்து பயந்து பார்த்தாள்.அவரோ முகம் இறுக உட்கார்ந்திருந்தார்.
ஆயுஷின் கையைப்பிடித்து தடுத்தவள் “நான் நான் அப்புறமாக சாப்பிடுறேங்க.எனக்கு பசிக்கலை” என்று எழுந்து ஓடுவதிலயே குறியாக இருந்தாள்.
பிரீத்தா இப்போது சத்தமாக “நித்ரா இன்னும் எத்தனை மாசத்துக்கு வயித்தையே மறைச்சிட்டிருப்ப. எங்கண்ணன் உனக்கு விவாகரத்தெல்லாம் தரமாட்டான். அவன் சாகுறவரைக்கும் நீ அவனோடுதான் வாழணும்னு முடிவோடு இருக்கான்”என்று சொன்னாள்.
அதில் பதறியது நித்ரா மட்டுமல்ல அருகில் இருந்த ஆயுஷும் எதிரில் இருந்த ஜெகன்னாத்தும்தான்.
என்ன சொல்லுற பிரீத்து? உனக்கெப்படி தெரியும்?என்று ஆயுஷ் கேட்டான்.
“பையா ஒரு பொண்ணு அதுவும் கல்யாணமான பொண்ணு புடவையால் வயித்தை மூடி மூடி யாருக்கும் தெரியாமல் வைக்கிறான்னா என்னவா இருக்கும்னு பேசிக்கா யோசிச்சாலே போதும். நேத்து நான் இவ்வளவு தூரம் உன்கிட்ட பேசினதுக்கு காரணமும் இதுதான் “ என்றாள்.
ஆம் நேத்து இரவு உணவு முடிந்ததும் பிரீத்தா வெளியே கார்டனில் நடக்கும்போதே ஆயுஷை தனியாக அழைத்துப்பேசினாள்.
உனக்கு ஒன்னு நித்ராவுக்கும் பிரச்சனை எவ்வளவு தூரம் போயிட்டு இருக்குன்னு எனக்கு தெரியாது
ஆனால் அம்மா பிரச்சனை என்னவென்று சொன்னாங்க .நான் இங்க வந்து பார்த்தபோதும் நீ அவளை மனுசியாகவே நடத்தலன்னும் கண்டுபிடிச்சிட்டேன்.
அதுக்கு முன்னாடி எனக்கு உன்கிட்ட ஒன்னு கேட்கணும். நீ உண்மையாகவே நித்துராவை காதலிச்சனா அவளை அவ பாட்டுக்கு விட்டுடு அவளை இப்படி வதைக்காதே. அவள் உன்னை விட்டு விலகிப்போகணும்னு முடிவு எடுத்ததற்கான காரணமே நம்ம டாடியாக இருக்கும்னு எனக்கு நேத்துதான் டவுட் வந்தது.
டாடியைப பார்த்தாலே பயந்து ஓடி ஒளிகிறாள் உன் மனைவி. அவர் இருக்கும் இடத்தில் நிழலைகூட அவள் மிதிக்காத ஒதுங்கிப் போகிறாள்.
அந்த பயம் உயிர் பயம் மட்டுமல்ல அப்படி இருந்தால் அவள் துணிந்து உனக்காக உன்கூட நின்றிருப்பாள்.
அவர் வேறு ஏதோ பயத்தைக்காட்டி இருக்கிறார்னு எனக்கு தோணுது.நீயும் அவளும் விரும்புறதைத் தெரிஞ்சுதான் டாடீ ரிச்சாவை இங்க கூட்டிட்டு வந்திருப்பார்.
அதுவுமில்லாம உனக்கு எங்கேஜ்மென்ட் நடந்ததுன்னு ஆஃபீஸ் சொல்லி இருக்காரு.ஸ்வீட் கொடுத்திருக்காரு.அந்த சமயத்துல நித்ரா அங்க தானே வேலை பார்த்துட்டு இருந்தாள். அவள் அந்தச் செய்தி கேட்டு உங்க கிட்ட சண்டை போட்டிருப்பாள்ல.அப்போ அவர் முதல்ல இருந்தே உங்க ரெண்டு பேரையும் வாட்ச் பண்ணிட்டு உங்கக் காதலை பிரிக்கத்தான் நினச்சிருக்காரு”
“இதை எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்லுற பிரீத்து.டாடி மேல சும்மா பழியைப்போடாத. நித்ராதான் எல்லாத்துக்கும் காரணம்” என்று நம்ப மறுத்தான்.
“நான் இவ்வளவு உறுதியாக சொல்றேன்னா அதுக்கு காரணம் இருக்கு பையா. ஏன்னா நான் மோகனை விரும்பினது டாடிக்கு முதலிலேயே தெரிஞ்சிருக்கு. அதனால்தான் அவர் நீ சொல்லுறதுக்கு முன்னாடியே எல்லாம் கல்யாணத்துக்கு எல்லாம் பேசி முடிச்சிருந்திருக்கார்.இதையே என் மாமியாக்காரி நம்ம அத்தை சொன்னதும்தான் எனக்கும் புரிஞ்சது.
“என்ன சொல்லுற நீ?இது உண்மையா?”
“எனக்கு தெரிஞ்சு என் விஷயத்துல அப்பா ரொம்ப விளையாட முடியாம போயிடுச்சு.ஏன்னா மோகன் மித்ராவை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டார்
இல்லைனா மோகனுக்கு சங்கு ஊதியிருப்பார்.
மோகனும் மோகன் குடும்பம் தப்பிச்சிட்டு. இதுக்கு முன்னாடி எனக்கு மோகன் மீது கோபம் இருந்தது .இப்போது வாழ்க்கையில் நிறைய புரிதல் வந்திருக்கிறது. அதனால்தான் நேற்று நிதானமாக நான் யோசித்து நித்ராவைக் கவனித்து பார்த்தேன் கண்டிப்பா நித்ரா வேறொரு கல்யாணத்துக்கு சம்மதித்து போனதற்கான காரணம் நம்ம டாடியாகதான் இருக்கும் தீர விசாரி” என்று உறுதியாகச் சொன்னாள்.
நித்ரா மேல தப்பு இருக்காது என்று முதல் முதலாக மனைவிக்காக அப்போதுதான் யோசிக்கத் தொடங்கினான்.
நிச்சயமா எந்த விஷயத்தில் நித்ரா மேல தப்பு இருக்க வாய்ப்பே இல்லை. அவள் கண்களில் உன்மீதானக் காதல் அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. நீ என்னதான் திட்டினாலும் அடித்தாலும் நம்ம மேல தப்பு இருக்கு நம்ம கணவன் அடிக்கிறான். அவனது மனதினைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு புரிதல் அவக்கிட்ட இருக்கு.உன் மனைவிகிட்ட இருக்கு அதை நீ சரியாக பார்த்து யோசித்திருந்தால் இவ்வளவு பிரச்சனை உனக்கு வந்திருக்காது என்று அவனது கையை பிடித்து சமாதானமாக பேசினாள்.
அவளது வார்த்தைகள் ஓரளவு புரிந்து கொண்டதினால்தான் இரவு நித்ராவிடம் கொஞ்சம் அன்பாக பேசினான்.
இப்பொழுது ப்ரீத்தா நித்ரா கர்ப்பமாக இருக்கிறாள் என்று சொன்னதும் ஜெகன்னாத் அப்படி இருக்கையில் இருந்து எழுந்து “ஒரு மிடில் கிளாஸ் வேலைக்காரியோட வயித்துல என் பிள்ளையோட குழந்தையா? அதுக்கு வாய்ப்பே இருக்க கூடாது அந்த கருவை உடனே ஹாஸ்பிடல்ல போய் அபார்ஷன் பண்ணிடுங்க” என்று கோபத்தில் அப்படியே கர்ஜித்தார்.
அவருக்குள்ளாக இருந்த அந்த குரூர எண்ணம் இப்பொழுதுதான் எல்லாரும் முன்னாடி வெளியேவந்தது.
அதைக் கேட்டு ஆயுஷோ டாடீ என்ன பேசுறீங்க?என்று சத்தமாக அவரை அழைத்து கோபத்தில் கத்தினான்.
நித்ராவோ பயத்தில் தனது வயிற்றோடு தனதுகையை வைத்து வைத்துக் கொண்டு அப்படியே ஒரு ஓரமாக போய் பயத்தில் உட்கார்ந்து விட்டாள்.
அவளது கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்திருந்தது.
ஜெகநாதனின் முழுமையான இந்த அரக்க குணத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை.
ஆயுஷிற்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது .தனது மனைவி பயந்து போய் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து எல்லோமே புரியவந்தது.
இது எதுவுமே தெரியாமல் நானும் அவளைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருந்திருக்கனே என்று ஓடிப் போய் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.